வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 10 மார்ச் 2020 (11:19 IST)

கொரோனா பரவல் குறித்து தமிழ் படத்தில் காட்சி! – இணையத்தில் வைரல்!

கொரோனா வைரஸ் பரவும் விதம் குறித்து துல்கர் சல்மான் நடித்த படத்திலிருந்து ஒரு காட்சி வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் உலக நாடுகள் அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நெட்டிசன்களும் சமூக வலைதளங்களில் இதுகுறித்த விழிப்புணர்வு மீம்களை பதிவிட்டு வருகின்றனர்.

அதேசமயம் கொரோனா வைரஸ் குறித்து ஏற்கனவே புத்தத்தில், காமிக்ஸில் எழுதப்பட்டுள்ள செய்திகளும் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் துல்கர் சல்மானின் தமிழ் பட வீடியோ வைரலாகி வருகிறது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான “வாயை மூடி பேசவும்” என்ற படத்தில் ஒரு வித்தியாசமான வைரஸ் மக்களை தாக்குவதால் அவர்களால் பேச முடியாமல் போகும். மேலும் பேசினாலே அந்த வைரஸ் பரவும் என்பதால் பேச தடை விதிக்கப்பட்டிருக்கும்.

அந்த படத்தில் துல்கருக்கு வைரஸ் பரவியதும் அவர் நண்பருக்கும் இருமி அதை பரப்புவது போல காட்சி ஒன்று இருக்கும். அது தற்போது கொரோனாவை சம்பந்தப்படுத்தி ட்ரெண்டாகி வருகிறது.

இதை துல்கருடன் நடித்த அர்ஜுனன் ஷேர் செய்ய துல்கர் சல்மான் “இது உண்மையாகவே விசித்திரமானது” என்று கூறியுள்ளார்.