சரக்கடிச்சா கொரோனா வராது? மூக்குமுட்ட குடிச்சு உயிரை விட்ட 27 பேர்
மது குடித்தால் கொரோனா வராது என்று நம்பி மதுக்குடித்த 27 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் முதன் முதலாக கண்டு பிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 3500 க்கும் மேற்பட்டவர்களின் உயிரிழந்துள்ளனர். சீனாவில் இருந்து இப்போது உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால் இந்தியாவில் முன்னெச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் வழங்கப்படும் சில தகவல்கள் பொய்யானவையாக உள்ளன. இதை நம்பி மக்கள் அதை பின்பற்றலாமா என யோசித்து வருகின்றனர்.
வெப்பமான பகுதிகளில் இங்த வைரஸ் பரவாது என்று கூறப்பட்டதை அடுத்து வெயிலில் நடக்க வேண்டும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அது போல மது அருந்தினால் இவ்வைரஸ் பரவாது என்றும் சமூகவலைதளங்களில் யாரோ கொளுத்திப் போட அந்த செய்தி வேகமாகப் பரவியது.
இதனை நம்பி ஈரானில் மதுகுடித்த 27 பேர் உயிரிழந்துள்ளனர். ஆம், அவர்கள் பருகிய மதுவில் மெத்தனால் அதிகமாக இருந்ததால் அடுத்த சில மணி நேரங்களில் பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்பட்ட அவர்கள் உயிரிழந்தனர்.