ஜார்ஜியா நாட்டில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றிய இந்தியர்கள் விஷவாயுக் கசிவால் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இருந்து பலர் பல நாடுகளுக்கு வேலைக்காக சென்று தங்கி வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறாக ஜார்ஜியா நாட்டிலும் பல இந்தியர்கள் தொழிலாளிகளாக பணியாற்றி வருகின்றனர்.
ஜார்ஜியாவில் உள்ள குடாவிரி என்ற பனி பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பல இந்தியர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த உணவகத்தில் கார்பன் மோனோ ஆக்ஸைடு என்ற விஷவாயு கசிந்ததால் பலர் மூச்சுத் திணறி பலியாகியுள்ளனர். இதில் அங்கு பணிபுரிந்த 12 இந்தியர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்த செய்தியை பிலிசியில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.
மேலும் உயிரிழந்தவர்கள் உடல்களை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K