1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 14 ஜூலை 2023 (10:34 IST)

பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதை பெறும் முதல் இந்தியர்.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதைப் பெரும் முதல் இந்தியர் என்ற பெருமை பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ளது. 
 
பிரதமர் மோடி தற்போது அரசுமுறை பயணமாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ள நிலையில் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான Grand Cross of Legion of Honor என்ற விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. 
 
பிரான்ஸ் நாட்டின் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான், இந்த விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி சிறப்பித்தார். இந்த கௌரவ விருதை பெரும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை மோடிக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனை அடுத்து இந்திய தலைவர்களும் உலக தலைவர்களும் பிரதமர் மோடிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்திய பிரதமர் மற்றும் பிரான்ஸ் பிரதமர் ஆகிய இருவரும் இருநாட்டு நல்லுறவு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Mahendran