வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (16:59 IST)

அமேசானில் பன்றிக்கு பாலூட்டிய பழங்குடி பெண்: வைரல் புகைப்படத்தின் பின்னணி என்ன?

பெண் ஒருவர் பன்றிக்குட்டிக்கு பாலூட்டும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
மூன்று வாரங்களுக்கு மேலாக அமேசான் காடுகள் தீப்பற்றி எரிந்து வரும் நிலையில், தீயை கட்டுப்படுத்த பிரேசில் அரசு போராடி வருகிறது. இந்நிலையில் சமூக வலைத்தளங்கலில் பெண் ஒரு பன்றிக்கு பாலூட்டும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. 
 
இந்த புகைப்படத்துடன், அமேசான் காடுகள் பற்றி எரியும் நிலையில் பழங்குடி பெண் ஒருவர் காட்டுப் பன்றியின் குட்டிகளுக்கு பாலூட்டி பசியை போக்கியுள்ளார் என்ற செய்தியும் வைரலாகிறது. இந்த புகைப்படம் குறித்த உண்மை பின்வருமாறு... 
இந்த புகைப்படத்தில் இருப்பது போல் பழங்குடி பெண் பால் கொடுத்தது உண்மைதான். ஆனால் அது இப்போது நடந்தது அல்ல அமேசான் பகுதியில் பல வருடங்களுக்கு முன்னர் நடந்த இந்த நிகழ்வை இப்போது அமேசான் காட்டுத்தீயுடன் இணைத்து வைரலாக்கி வருகின்றனர். 
 
ஆனால், அமேசானின் முரா பழங்குடியினர் தாங்கள் புனிதமானதாக கருதும் வனத்தைக் காக்க, இறுதிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடுவோம் என உறுதிபூண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.