புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 24 ஆகஸ்ட் 2019 (19:22 IST)

தங்க சங்கியை விழுங்கிய திருடன் ... பொருளை மீட்க போலீஸார் ’பனானா ஆப்ரேஷன்’

ராஜஸ்தான் மாநிலம் பிகானிரில் கங்காசாகர் பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை அன்று ஒரு ஷாப்பிங் சென்றிருந்தார். அப்போது இரு திருடர்கள் அவரை  பின் தொடர்ந்து சென்று அவர் அப்பெண்னின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர்.
இந்த திருட்டு குறித்து அப்பெண் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதனையடுத்து, போலீஸார் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சியின் அடிப்படையில், விசாரித்து சுமார் 1 மணிநேரத்தில் திருடர்களை பிடித்தனர். ஆனால் இருவரில் ஒருவன் தன் குற்றத்தை மறைக்கும் பொருட்டு தங்க சங்கிலியை விழுங்கிவிட்டார்.
 
பின்னர் காவல்துறையினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு எக்ஸ்ரேவில் பரிசோதித்த மருத்துவர்கள் குடலில் இருந்து சங்கிலியை எடுக்க எண்டோஸ்கோபி செய்ய வேண்டும் அல்லது மலம் கழிக்க செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
 
இதில் இரண்டாவதை செயல்படுத்த மருத்துவர்கள் முயன்றனர். இதற்காக 2  டஜன் வாழைப்பழம் கொடுத்தனர், அதன்பின்னர் மலத்துடன் சங்கிலியும் வெளியேறியது. இதனால் இந்த சோதனை போலீஸாருக்கு வெற்றியை கொடுத்துள்ளது.