4வது மாடியில் இருந்து தவறி விழுந்த நபர்: அதிர்ச்சி வீடியோ!!
குடியிருப்பு பகுதி 4வது மாடியில் இருந்து ஒரு நபர் தவறி விழுந்த வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய ரஷ்யாவில் உள்ள செல்யாபின்ஸ்க் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. அந்த நபர் குடியிருப்பின் நான்காவது மாடியில் உள்ள ஜன்னல் வழியாக இறங்க முயற்சித்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக பிடிமானத்தை தவறவிட்ட அவர் கீழே விழுந்துள்ளார். அந்த நபர் எதற்காக ஜன்னல் வழியாக இறங்க முயன்றார் என்பதற்கான காரணம் வெளியாகவில்லை.
தீவிரி சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அந்த நபர்.