வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (10:59 IST)

அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது – அறிமுக வீரரைப் புகழ்ந்த கோஹ்லி !

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் சிறப்பாக பந்துவீசிய நவ்தீப் சைனிக்கு இந்திய அணியில் நல்ல எதிர்காலம் இருப்பதாக கேப்டன் கோஹ்லி கூறியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி 20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இதில் அறிமுக வீரராகக் களமிறங்கிய பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி முதல் போட்டியில் அபாரமாகப் பந்துவீசி 3 விக்கெட்களைக் கைப்பற்றி ஆட்டநாயகன் விருது வென்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கோஹ்லி ‘நவ்தீப் சைனி மிக அருமையாக பந்துவீசினார். அவரிடம் உள்ள திறமையால் அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. அறிமுகப் போட்டியிலேயே அவர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அவர் அசாத்தியமானத் திறமை கொண்டவர். நாள் முழுவதும் பந்துவீசச் சொன்னாலும் அசராமல் வீசுமளவுக்கு உடல்தகுதியைக் கொண்டுள்ளார். ’ எனக் கூறியுள்ளார்.