வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (17:51 IST)

இந்த இடத்தை பார்க்க கூடும் கூட்டம்: சீனாவின் டெட் ஸ்சி!!

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள உப்பு ஏரியை காண்பதற்கு தான் மக்கள் பெரும் அளவில் திரண்டு வருகின்றனர். இதற்கு காரணமும் உள்ளது. 


 
 
சீனாவில் என்செங் நகரத்தில் மிகப்பெரிய உப்பு ஏரி உள்ளது. உலகிலேயே இந்த உப்பு அதிகம் உள்ள மூன்றாவது ஏரி இதுவாகும். 
 
இந்த ஏரியில் சோடியம் சல்பேட் உப்பு அதிக அளவு உள்ளது. தற்சமயம் இந்த ஏரி இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. 
 
டுனாலியேல்லா சலினா என்ற பாசி இந்த ஏரியில் படர்ந்துள்ளதால், நீரின் நிறம் மாறியுள்ளது. இதனால் ஏரியானது ஒரு பக்கம் பச்சை நிறத்திலும், மற்றொரு பக்கம் இளஞ்சிவப்பு நிறத்திலும் காட்சியளிக்கிறது.
 
இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். கடந்த 4,000 ஆண்டுகளாக சீன மக்கள் இந்த ஏரியிலிருந்து தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உப்பை உற்பத்தி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.