திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: சனி, 16 செப்டம்பர் 2017 (01:55 IST)

ரூ.3 கோடி மதிப்புள்ள கோகைன் கடத்திய இளம்பெண் கைது

நட்சத்திர ஓட்டல்களில் நடைபெறும் பார்ட்டியில் நடனம் ஆடும் பெண்மணி ஒருவர் ரூ.3 கோடி மதிப்பிலான கோகைன் என்ற போதைப் பொருளை கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.



 
 
காலையில் கூரியர் டெலிவரி செய்பவராகவும், இரவில் பார்ட்டிகளில் நடனம் ஆடுபவராகவும் இருந்த பெண்மணி ஒருவரின் காரில் இருந்து ரூ.3 கோடி மதிப்புள்ள கோகைனை போலீசார் கைப்பற்றி அவரை கைது செய்துள்ளனர்.
 
நீதிமன்றத்தில் அந்த பெண் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவருக்கு ஏழு வருட சிறைத்தண்டனை அளித்து லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த பெண் குறித்த விபரங்களை தெரிவிக்க போலீஸார் மறுத்துவிட்டதாக லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.