ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (13:45 IST)

நடிகையை துப்பாக்கி வைத்து மிரட்டிய நபர்...

பிரபல மலையாள நடிகையான பிரணதியை, துப்பாக்கி முனையில் மிரட்டிய அவரது உறவினரை போலீசார் கைது செய்துள்ளனர். 


 

 
நடிகர் பரத் நடித்து மலையாளத்தில் ஹிட் அடித்த 4 ஸ்டூட்ன்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரணதி. அதன் பின், குருதேவா, காற்றுள்ளவரை, வணக்கம் தலைவா உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும், சில மலையாள மற்றும் கன்னட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
 
இவருக்கும், இவரது தாய் மாமன் ஒருவருக்கும் கேரள மாநிலம் தலச்சேரியில் உள்ள ஒரு பூர்வீக சொத்து தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சென்னையில் தங்கியுள்ள பிரணதி சமீபத்தில் கேரளாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். 
 
அப்போது அந்த வீட்டிற்கு வந்த அவரது தாய்மாமம், துப்பாக்கி முனையில் அவரை மிரட்டியுள்ளர். இதனால், போலீசாரிடம் பிரணதி புகார் அளித்தார். எனவே, போலீசார் அவரது தாய்மாமனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.