1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 28 ஏப்ரல் 2022 (13:28 IST)

பாமாயில் ஏற்றுமதிக்கு தடை; விலை உயரும் அபாயம்! – இல்லத்தரசிகள் கவலை!

ஏற்கனவே உலகம் முழுவதும் சமையல் எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில் பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசியா தடை விதித்துள்ளது.

உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய்களில் பாமாயில் முக்கிய பங்கு வகிக்கிறது. பாமாயில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தோனேசியா முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தோனேஷியாவில் உற்பத்தி செய்யப்படும் பாமாயிலில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே உள்நாட்டு பயன்பாட்டிற்கு விற்கப்படுகிறது.

மீத இரண்டு பங்கு அளவு பாமாயில் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சமீப காலமாக இந்தோனேஷியாவிலேயே பாமாயிலுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பாமாயில் வெளிநாட்டு ஏற்றுமதியை இந்தோனேசிய அரசு தடை செய்துள்ளது. இதனால் மற்ற நாடுகளில் பாமாயில் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே உக்ரைன் போரால் சூரியகாந்தி எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில் பாமாயில் எண்ணெய் விலையும் அதிகரிக்கலாம் என மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.