ஞாயிறு, 9 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Dinesh
Last Modified: திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (11:26 IST)

ராஜ்நாத் சிங்கிற்கு தீவிரவாதி எச்சரிக்கை

ராஜ்நாத் சிங்கிற்கு தீவிரவாதி எச்சரிக்கை

பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் வருவதை தடுப்பேன் என்று தீவிரவாதி சையத் சலாவுதீன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இஸ்லாமாபாத் நகரில் நடைபெறும் சார்க் நாடுகளின் உள்துறை மந்திரிகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் 2 நாள் பயணமாக வரும் 3-ந் தேதி பாகிஸ்தான் செல்கிறார்.  

இந்நிலையில், காஷ்மீரில் படைகளை குவித்து அப்பாவி மக்களை இரத்தம் சிந்த வைத்தவர் ராஜ்நாத் சிங் என்று கூறி அவரை பாகிஸ்தான் வரவேற்பதற்கு ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத் தலைவன் சையத் சலாவுதீன் எதிர்ப்பு தெரிவித்துள்ளான். மேலும் ராஜ்நாத் சிங்கின் பாகிஸ்தான் பயணத்தை தடுக்கப்போவதாகவும் தீவிரவாதி சையத் சலாவுதீன் மிரட்டல் விடுத்துள்ளான்.