வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 18 ஜனவரி 2018 (16:22 IST)

பாகிஸ்தான் தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர்

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்கியதில்  தமிழகத்தை சேர்ந்த வீரர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்,
தமிழகத்ததில் தர்மபுரி மாவட்டம் பண்டார செட்டிபட்டியை சேர்ந்தவர் சுரேஷ், இவருக்கு 13 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.   கடந்த 1976 ல் பிறந்த அவர், 1995ல் எல்லை பாதுகாப்பு படையில் சேர்ந்து தற்பொழுது வரை நாட்டின் மீதுள்ள பற்றால் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
 
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது அத்துமீறி இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் சார்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரரான சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.