திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பிரதமர் மோடி: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

Mamtha
பிரதமர் மோடி மாற்றாந்தாய் மனப்பான்மை நடந்து கொள்கிறார் என்றும் குறிப்பாக எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை மோசமாக நடத்துகிறார் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்
 
பெட்ரோல் டீசல் மற்றும் எரிவாயு விலையை மத்திய அரசு குறைத்துவிட்டது என்றும் மாநில அரசுகளும் குறைக்க வேண்டும் என்று கூறுவதில் எந்த விதத்திலும் நியாயமில்லை என்றும் அவர் கூறியுள்ளார் 
 
முன்னதாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசே காரணம் என்றும் மத்திய அரசு கடந்த நவம்பர் மாதமே வரியை குறைந்து விட்டது என்றும் ஆனால் தமிழ்நாடு மேற்கு வங்காளம் தெலுங்கானா மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் குறைக்கவில்லை என்றும் அதனால்தான் அந்த மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை அதிகமாக உள்ளது என்றும் பிரதமர் மோடி கூறியிருந்தார்.