1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. pakistan pm imrankhan resigns his post?

பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் ராஜினாமாவா?

பாகிஸ்தான்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
நாளை இம்ரான்கான் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நடைபெற உள்ளது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அவரது சொந்தக் கட்சியைச் சேர்ந்த சிலரே அவருக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
 
இந்த நிலையில் இன்று நடைபெறும் கூட்டம் ஒன்றில் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அதிகாரபூர்வமாக அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது
 
இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தால் நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
அடுத்த கட்டுரையில்
புதின் அரசை கவிழ்க்க ஜோ பைடன் திட்டமா? – வெள்ளை மாளிகை விளக்கம்!