புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 8 பிப்ரவரி 2020 (11:15 IST)

பாலியல் குற்றவாளிகளுக்கு நடுத்தெருவில் தூக்கு: புதிய சட்டம் நிறைவேற்றம்

பாகிஸ்தான் பாராளுமன்றம்
குழந்தைகளை பாலியல்ரீதியாக துன்புறுத்துபவர்களை நடுத்தெருவில் வைத்து தூக்கிலிட பாகிஸ்தான் அரசு சட்டம் இயற்றியுள்ளது.

உலகமெங்கும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் பல்வேறு நாடுகள் பாலியல் குற்றங்களுக்கு கடுமையான சட்டங்களை இயற்றி வருகின்றன.

இந்நிலையில் பாகிஸ்தானில் குழந்தைகள் மீது பாலியல்ரீதியான துன்புறுத்தல் செய்வோரை நடு வீதியில் தூக்கில் தொங்க விடுவதற்கான புதிய சட்டம் ஒன்றை அந்நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அந்நாட்டு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அலி முகமது கான், குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களை இதுபோல தண்டிப்பதில் எந்த தவறும் இல்லை என தெரிவித்துள்ளார்.