3 மாதமாக சம்பளம் வழங்கவில்லை… டிவிட்டரில் புலம்பும் பாகிஸ்தான் தூதரக ஊழியர்கள்!
பாகிஸ்தான் நாட்டின் செர்பிய தூதரக அதிகாரிகளுக்கு மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை அவர்கள் வைத்துள்ளனர்.
இது சம்மந்தமாக டிவிட்டரில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை டேக் செய்து செர்பியா நாட்டு தூதரக அதிகாரிகள் தங்கள் குறைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். 3 மாதமாக தங்களுக்கு சம்பளம் வழங்காததால் தங்கள் குழந்தைகள் பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாமல் பள்ளியில் இருந்து அனுப்பப் படுகின்றனர். இன்னும் எத்தனை நாளைக்கு நாங்கள் அமைதியாக வேலை பார்ப்போம் என பிரதமர் நினைக்கிறார் என புலம்பியுள்ளனர்.
பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.