1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: செவ்வாய், 10 மே 2016 (21:39 IST)

செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன்: நாசா உறுதி

செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் உள்ளது என்று நாசா விஞ்ஞானிகள் உறுதிபடுத்தி உள்ளனர்.


 
செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தை ஆராய்வதற்காக ஷோபியா (SOFIA) என்னும் திட்டத்தை ஜெர்மனியுடன் இணைந்து நாசா செயல்படுத்தி வருகிறது. 
 
புவி வளிமண்டலத்தில் பட்டு புற ஊதக்கதிர்கள்  சிதறுவதால் செவ்வாயின் வளிமண்டலம் குறித்த ஆராய்ச்சியை பூமியில் இருந்தவாறு சக்திவாய்ந்த தொலைநோக்கிகள் மூலம் ஆராய்ச்சி செய்வது இயலாத காரியமாக இருந்துவந்தது.
 
ஆனால் தற்போது, போயிங் 747எஸ்.பி ஜெட்லைனர்' என்ற விமானம் மூலம் தொலைநோக்கியை விண்வெளிக்கு அனுப்பியது நாசா.
 
இதனால் 100 அங்குலம் விட்டமுள்ள சக்திவாய்ந்த தொலைநோக்கியைக் கொண்டு 13.7 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தப்படியே செவ்வாயின் பரப்பை துல்லியமாக ஆராய முடியும்.
 
இந்த ஆராய்ச்சி மூலம் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் உள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
 
புதிய ஆய்வின் மூலம், செவ்வாய் கிரகத்தை சுற்றியிருந்த வளிமண்டலம் அதன் ஈர்ப்பில் இருந்து பிரிந்து சென்றதற்கான காரணத்தை அறிய இயலும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 
 
மேலும் செவ்வாய் கிரகத்தில் குடியேறும் மனிதனின் எதிர்கால கனவை நாசா விஞ்ஞானிகளின் ஆராச்சி நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. 


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்