1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 2 ஜூன் 2024 (13:45 IST)

திடீரென தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்கும் இந்தியா கூட்டணி தலைவர்கள்: என்ன காரணம்?

இந்தியா கூட்டணியில் உள்ள முக்கிய தலைவர்கள் இன்று மாலை தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இந்தியாவில் ஏழு கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது என்பதும் காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை அன்று இரவுக்குள் கிட்டத்தட்ட முடிவு தெரிந்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நியாயமாகவும் நேர்மையாகவும் முறையாகவும் நடத்த வலியுறுத்தி தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் முறையிட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளதாகவும் இதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளை இன்று மாலை 4:30 மணி சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கும் நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திக்க இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஏற்கனவே நேற்று டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து ஆலோசனை செய்தனர் என்பதும் தேர்தல் முடிவுகளுக்கு பின் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
Edited by Siva