1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 27 பிப்ரவரி 2017 (08:13 IST)

ஆஸ்கார் விருதை பெற்ற ஹாலிவுட் கலைஞர்கள் யார் யார்?

உலகப்புகழ் பெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் விழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் 24 பிரிவுகளில் ஆஸ்கர் திரைப்பட விருதுகள் வழங்கப்பட உள்ளன. ஆஸ்கார் விருதுக்கு ’லா லா லேண்ட்’ திரைப்படம் 14 பிரிவுகளிலும், மூன்லைட், அரைவல் ஆகிய படங்கள் 8 பிரிவுகளிலும் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே

இந்நிலையில் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது மூன்லைட் படத்தில் நடித்த மஹேர்சலா அலிக் அவர்களுக்கும், சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருதை பென்டாஸ்டிக் பீஸ்ட் அன்ட் வேர் டு ஃபைன்ட் தம் படத்துக்காக கொலின் அட்வுட் அவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.





அதே போல் சிறந்த சவுண்ட் எடிட்டிங்கிற்கான ஆஸ்கர் விருதை அரைவல் திரைப்படமும், சிறந்த சவுண்ட் மிக்ஸிங்கிற்கான ஆஸ்கர் விருதை ஹாக்ஸா ரிட்ஜ் என்ற திரைப்படமும் வென்றது

மேலும் சிறந்த ஒப்பனைக்கான ஆஸ்கர் விருது சூசைட் ஸ்குவாட் படத்தில் பணிபுரிந்த அலிசாண்ட்ரோ, ஜியார்ஜியோ, கிறிஸ்டோபர் நெல்சன் ஆகியோர் தட்டி சென்றனர். சிறந்த முழுநீள ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை ஒ.ஜே.மேட் இன் அமெரிக்கா படம் வென்றது. விருதை எஸ்ரா எடில்மேன், கரோலின் வாட்டர்லோ ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

சிறந்த நடிகர், நடிகைக்கான ஆஸ்கார் விருது உள்பட மற்ற பிரிவுகளின் விருதுகள் இன்னும் ஒருசில நிமிடங்களில் அறிவிக்கப்படவுள்ளதால் அதுகுறித்த தகவல்களை இன்னும் சில நிமிடங்களில் பார்ப்போம்.