1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 4 ஆகஸ்ட் 2018 (17:48 IST)

என்னை அவனுக்கு மிகவும் பிடிக்கும்; வெளிஉலகிற்கு அறிமுகப்படுத்திக் கொண்ட ஒசாமாவின் தாய்!

உலகையே அச்சுறுத்திய பின்லேடனின் தாய் முதல் முறையாக தன்னை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளார்.

 
உலகில் சக்தி வாய்ந்த நாடாக கருத்தப்படும் அமெரிக்காவை வெகு காலமாக பயங்கரவாதம் என்ற பெயரில் ஒசாமா பின்லேடன் அச்சுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
 
அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களை விமானம் மூலம் சேதப்படுத்தி உலக நாடுகளை அனைத்தையும் அச்சத்தில் ஆழ்த்தியவர் ஒசாமா பின்லேடன். இந்நிலையில் பிரபல ஆங்கில நாளிதழான காட்டியனுக்கு ஒசாமாவில் தாய் பேட்டியளித்துள்ளார்.
 
இதன்மூலம் தான் யார் என்பதை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார். பேட்டியில் அவர் ஒசாமா பின்லேடன் குறித்து கூறியதாவது:-
 
மற்ற குழந்தைகளைப் போல ஒசாமாவும் நல்ல சிறுவனாக வளர்ந்து வந்தான். மற்றவர்களுடன் பேசவும், பழகவும் கூச்சப்படுவான். பள்ளி காலம் வரை நல்லவனாக இருந்தான்.
 
ஜெட்டாவில் உள்ள பலகலைக்கழகத்தில் பயிலும் பொதுதான் அவன் முளைச்சலவை செய்யப்பட்டான். அவர்களிடம் இருந்து ஒதுங்கி இருக்குமாறு நான் எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பேன். அவர் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதை என்னிடம் செல்ல மாட்டேன்.
 
என்னை அவனுக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறியுள்ளார். மேலும், ஒசாமாவை 1999ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் வசித்த போதுதான் பார்த்தோம். அதன்பிறகு பார்க்கவில்லை என்று ஒசாமா குடும்பத்தினர் கூறியுள்ளனர்.