1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 27 மார்ச் 2023 (20:36 IST)

ஒரு கிலோ அரிசி ரூ.335: பாகிஸ்தானில் வரலாறு காணாத விலைவாசி உயர்வு

rice
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்து வரும் நிலையில் ஒரு கிலோ அரிசி ரூபாய் 335 என விற்பனை ஆகி வருவதாக வெளி வந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாகிஸ்தானில் மின்சாரம், சமையலுக்கு பயன்படுத்தப்படும் கேஸ்,பெட்ரோல் டீசல் ஆகிய அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது என்பதும் அந்த வகையில் ரம்ஜான் மாதத்தை பொதுமக்கள் கொண்டாடிவரும் நிலையில் அரிசி ஒரு கிலோ 335 என விற்பனையாகி வருவதால் ஏழை எளிய மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
மேலும் ஒரு டஜன் ஆரஞ்சு ரூ.440 என்றும் வாழைப்பழம் ஒரு டஜன் 300 ரூபாய் என்றும் விற்பனையாகி வருவதாகவும் இறைச்சியின் விலையும் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விலைவாசி உயர்வு, பண வீக்கம் காரணமாக பாகிஸ்தான் மக்கள் கடும் துயரங்களை சந்தித்து வருவதாக அங்குள்ள ஊடகங்களில் செய்தி வெளியிட்டு வருகின்றன
 
Edited by Siva