1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 5 செப்டம்பர் 2024 (17:12 IST)

காதலனால் தீ வைத்து எரிக்கப்பட்ட ஒலிம்பிக் வீராங்கனை.! மருத்துவமனையில் பலி.!!

Rebecca
காதலனால் தீ வைத்து எரிக்கப்பட்ட உகாண்டா தடகள வீராங்கனை ரெபேக்கா செப்டேஜி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
கென்யாவில் வசித்து வந்த உகாண்டா தடகள வீராங்கனை ரெபேக்கா செப்டேஜி, மேற்கு டிரான்ஸ் நஸோயா கவுண்டியில் உள்ள அவரது வீட்டில் காதலனுடன் ஏற்பட்ட தகராறில் தீ வைத்து எரிக்கப்பட்டார். கருத்து வேறுபாடு காரணமாக அவளது காதலன் பெட்ரோலை மேலே ஊற்றி எரித்துள்ளார். 
 
இதில் பலத்த காயமடைந்த அவர் உடலில் 75% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்தாக உகாண்டா தடகள கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 
குடும்ப வன்முறையால் துரதிருஷ்டவசமாக உயிரிழந்த எங்கள் தடகள வீராங்கனை ரெபேக்கா செப்டேஜி இன்று (செப் 5) அதிகாலை மரணமடைந்ததை அறிவிப்பதில் நாங்கள் மிகுந்த வருத்தமடைகிறோம் என்றும் கூட்டமைப்பாக, இதுபோன்ற செயல்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.