ஒரேவாரத்தில் 3 வது முறையாக ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை அண்டை நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறது. அந்த நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளதால், பொருளாதார சிக்கல், உணவுப் பொருட்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தொடர்ந்து, அமெரிக்காவில் ஆதரவுள்ள தன் அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் ஏவுகணை சோதனைகள் தொடர்ந்து நடத்தி வருவதுடன் கண்டம்விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணை தாக்குதலும் நடத்தி வருகிறது.
இதனால் கொரிய பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது, சமீபத்தில் கடலில் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து 2 ஏவுகணைகளை வடகொரிய ஏவிய நிலையில், அடுத்து, மார்ச் 14 ஆம் தேதி மீண்டும் இரண்டாவது முறையாக தொடர்ச்சியாக ஏவுகணை ஏசியது. இந்த நிலையில், இன்று மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
இது மிகப்பெரிய ஏவுகணை என்று கூறப்படுகிறது. ஓரே வாரத்தில் மட்டும் இந்த நாடு 3 முறை ஏவுகணை நடத்தியுள்ளது அண்டை நாடுகள் மட்டுமின்றி உலக நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.