திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 4 செப்டம்பர் 2017 (06:40 IST)

முதல் நாள் பள்ளிக்கு சென்ற இரண்டு இரட்டை குழந்தைகள்

வடக்கு இங்கிலாந்து பகுதியில் பெர்க்ஷையர் என்ற இடத்தில் ஷாரொன் மற்றும் ஜூலியன் என்ற தம்பதிக்கு கடந்த 2013ஆம் ஆண்டு இரண்டு இரட்டை குழந்தைகள் அதாவது நான்கு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்தன.



 
 
இரண்டு ஆண்குழந்தைகள் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் பெற்ற இந்த தம்பதிகள் நான்கு குழந்தைகளையும் பாசத்துடன் வளர்த்து வந்த நிலையில் நேற்று இந்த குழந்தைகள் முதன்முதலாக பள்ளிக்கு சென்றன.
 
70 மில்லியன் பிரசவத்தில் ஒரு பிரசவம் இதுமாதிரி அதிசயமாக நடைபெறும் நிலையில் அவர்களில் ஒரு தம்பதியாக இருந்து வரும் இந்த தம்பதிகள் முதல் நாள் பள்ளிக்கு செல்லும் தங்களது குழந்தைகளுக்கு ஏராளமான பணம் செலவு செய்து உடை மற்றும் சில பொருட்களை செலவு செய்துள்ளனர்.