திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 20 அக்டோபர் 2024 (10:46 IST)

தனியார் சட்டக் கல்லூரிகளில் எல்எல்பி படிப்பு: சான்றிதழ் சமர்ப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு..!

தனியார் சட்டக் கல்லூரிகளில் எல்எல்பி படிப்புக்கு மின்னஞ்சல் வாயிலாக சான்றிதழ்களை சமர்ப்பிக்க கடைசி தேதி குறித்த அறிவிப்பை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 
 
சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் 3 ஆண்டு எல்எல்பி படிப்புக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பதாரர்கள் தங்கள் சான்றிதழ்களை மின்னஞ்சல் வாயிலாக அக்டோபர் 23-ம் தேதி மாலை 5.45 மணி வரை சமர்ப்பிக்கலாம். ஆன்லைன் சரிபார்ப்பு அக்.23 வரை நடைபெறும்.
 
கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை 26-ம் தேதி இணையவழியில் வழங்கப்படும். சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரியில் அக்டோபர் 28 முதல் 30-ம் தேதிக்குள் சேர்ந்துவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
 
Edited by Siva