வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 31 மே 2018 (12:58 IST)

இன்னும் 2 ஆண்டுகளுக்கு நோபல் பரிசு கிடையாது?

உலகின் மிக சிறப்பு மிக்க விருதாக கருதப்படுவது நோபல் பரிசு. ஆனால், இந்த ஆண்டு நோபல் பரிசு வழங்கப்படாது என நோபல் பரிசு வழங்கும் தி ஸ்வீடன் அகாடெமி அறிவித்தன. 
 
இந்நிலையில், தற்போது இலக்கியத்திற்கான நோபல் பரிசு இன்னும் 2 ஆண்டுகளுக்கு யாருக்கும் வழங்கப்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஸ்வீடிஷ் அகாடமியின் தேர்வுக்குழு உறுப்பினர் காத்தீரனா பிராஸ்டென்சனின் கணவர் ஜீன் கிளாட் அர்னால்ட் மீது பாலியல் புகார் எழுந்ததால், இந்த ஆண்டு நோபல் பரி வழங்கப்படாது என்றும், இந்த ஆண்டுக்கான பரிசுகள் அடுத்த ஆண்டுடன் சேர்த்து வழங்கப்படும் அறிவிகப்பட்டது. 
 
ஆனால், தற்போது அடுத்த ஆண்டும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படாது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், இது குறித்து பின்வருமாரு தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்குழுவிற்கு ஏற்பட்ட களங்கம் போக்கப்படும் வரை இலக்கியத்துக்கு நோபல் பரிசு வழங்குவது சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.