செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 7 ஜூன் 2022 (19:19 IST)

அமைச்சர்களுக்கு இனி சம்பளம் இல்லை: அதிரடி அறிவிப்பு

salaries
இலங்கையில் அமைச்சர்களுக்கு இனி சம்பளம் இல்லை என்று அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கடந்த சில மாதங்களாக இலங்கை பொருளாதார திண்டாட்டத்தில் உள்ளது என்பதும் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றவுடன் செலவினங்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்
 
இந்தநிலையில் இலங்கையில் ஒரு ஆண்டு காலத்திற்கு ஊதியமின்றி பணியாற்ற அமைச்சர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அமைச்சர்களே முன் வந்து தங்களுக்கு சம்பளம் வேண்டாம் என்று கூறியுள்ளதை அடுத்து இலங்கையில் இனிமேல் அமைச்சர்களுக்கு சம்பளம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது