1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 19 மார்ச் 2024 (09:04 IST)

வீட்டிலிருந்து பணி செய்தால் பதவி உயர்வு கிடையாது! டெல் நிறுவனம் அதிரடி அறிவிப்பு..!

Dell
வீட்டில் இருந்து பணி செய்தால் பதவி உயர்வு கிடையாது என டெல் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளதை அடுத்து அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டெல் நிறுவனம் அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு உலகம் முழுவதும் கிளைகளை வைத்துள்ளது என்பதும் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் தயாரிப்பு மற்றும் மின்னணு உதிரி சாதனங்கள் தயாரிப்பு பணியில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்நிலையில் கொரோனா பரவலின் போது வீட்டில் இருந்து வேலை பார்க்கும் முறையை டெல் நிறுவனம் அறிமுகப்படுத்திய நிலையில் இன்னும் சில ஊழியர்கள் அலுவலகத்திற்கு வராமல் இருப்பதாகவும், எனவே  அனைத்து ஊழியர்களும் அலுவலகத்திற்கு வரவேண்டும் என டெல் நிறுவனம் அறிவுறுத்தி வருகிறது 
 
இந்த நிலையில் வீட்டிலிருந்து பணி செய்யும் ஊழியர்கள் அல்லது ஹைப்பிரிட் முறையில் வீட்டிலும் அலுவலகத்திலும் வந்து மாறி மாறி பணி புரிந்து வருபவர்களுக்கு பதவி உயர்வு கிடையாது என டெல் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் அனைத்து ஊழியர்களும் இனி அலுவலகம் வந்து பணிபுரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
புதிய சிந்தனைகளை உருவாக்குவதற்காகவும் ஒருங்கிணைந்த மேம்பட்ட சூழ்நிலை ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காகவும் அலுவலகத்திற்கு வந்து தான் பணி புரிய வேண்டும் என டெல் நிறுவனம் அறிவுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva