1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 10 டிசம்பர் 2020 (07:39 IST)

கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மது அருந்த கூடாது: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுப்பதற்காக ரஷ்யா பிரிட்டன் உள்பட பல நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்து அவற்றை பொதுமக்களுக்கு சோதனை செய்து வருகின்றன. சமீபத்தில் இங்கிலாந்து மக்களுக்கு தடுப்பூசி போட அந்நாட்டு அரசு முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அமெரிக்கா இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் தடுப்பூசியை பொதுமக்களுக்கு போடும் நடவடிக்கைகளை விரைவில் தொடங்க உள்ளன. இந்த நிலையில் கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டபின் இரண்டு மாதங்களுக்கு தடுப்பூசி போட்டவர்கள் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும் என ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
 
கொரோனா தடுப்பு மருந்தை 21 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை செலுத்த வேண்டும் என்றும் இந்த 42 நாட்களுக்கு மது அருந்த கூடாது என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர் கொரோனா தடுப்பு மருந்து செலுத்திய காலத்தில் மது அருந்தினால் அந்த மருந்து வேலை செய்யாது என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் உலகம் முழுவதும் மருந்து எடுத்துக்கொண்டவர்கள் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது