ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 27 ஜனவரி 2024 (13:49 IST)

பணி நீக்க நடவடிக்கையில் Swiggy மற்றும் Flipkart

பிளிப்கார்டு மற்றும் ஸ்விகி நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களை பணி அந்த நிறுவனங்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது.

உலகம் முழுவதும் அமேசான், மைக்ரோசாப்ட், டெஸ்லா, கூகுள் உள்ளிட்ட பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்ற ஊழியர்களை அந்த நிறுவனங்கள் பணி நீக்கம் செய்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் உள்ள முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி, தங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்ற சுமார் 400 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

அதேபோல்,  பிரபல ஆன்லைன் விற்பனை  நிறுவனமான Flipkart தங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் சுமார் 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும், வேலைக்கு புதிய பணியாட்கள் எடுப்பது.  ஊதிய உயர்வு போன்றவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.