வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 5 டிசம்பர் 2019 (09:55 IST)

ஹாங்காங் கப்பலில் சென்ற இந்தியர்கள் கடத்தல்! – கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்!

ஹாங்காங் சரக்கு கப்பலில் சென்று கொண்டிருந்த இந்தியர்கள் உட்பட 19 பேரை கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாங்காங் நாட்டை சேர்ந்த எண்ணெய் கப்பல் ஒன்று நைஜீரிய கடல் பகுதியில் சென்று கொண்டிருந்திருக்கிறது. அப்போது திடீரென அங்கு தோன்றிய கடற்கொள்ளையர் கும்பல் ஒன்று அங்கிருந்த 18 இந்தியர்கள் மற்றும் ஒரு துருக்கி நாட்டினர் உட்பட 19 பேரை கடத்தி சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த இந்திய தூதரகம் நைஜீரியாவை தொடர்பு கொண்டு கடத்தப்பட்டவர்களை மீட்கும் பணிகளில் இறங்கியுள்ளது. கப்பலில் 26 பேர் பயணம் செய்த நிலையில் கொள்ளையர்கள் இந்தியர்களை அதிகமாக கடத்தி சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.