வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 7 டிசம்பர் 2022 (17:04 IST)

டிரம்பின் தொழில் நிறுவனங்கள் வரி மோசடி செய்தது உண்மை தான்: நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பு

trump
முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களுக்கு சொந்தமான தொழில் நிறுவனங்கள் வரி மோசடி செய்தது உண்மைதான் என நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான தொழில் நிறுவனங்கள் வரி மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. வருமான வரித்துறையின் உயர் அதிகாரிகளுக்கு ஆடம்பர குடியிருப்பு மாளிகை கட்டியது, இலவச வாடகை மற்றும் கார் குத்தகை செலுத்தியது தொடர்பாக மோசடி நடந்ததாகவும் வருமானத்தை தெரிவிக்காமல் மறுத்ததாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டு இருந்தது
 
 இந்த வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில் டிரம்புக்கு சொந்தமான நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டு இருப்பது உண்மைதான் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பு தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ள டிரம்புக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என அமெரிக்க நாளிதழ் செய்திகள் வெளியிட்டுள்ளன
 
Edited by Mahendran