வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 10 ஜூன் 2023 (19:38 IST)

இந்தோனேஷியாவிற்கு தேனிலவு சென்ற புதுமண தம்பதியர் நீரில் மூழ்கி பலி!

இந்தோனேஷியா நாட்டிற்கு தேனிலவுக்குச் சென்ற டாக்டர் தம்பதியர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீர் குப்பத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் மருத்துவர் விபூஷ்னியா.

இவருக்கும் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் லோகேஷ்வரனுக்கும் கடந்த ஜூன் மாதம் 1 ஆம் தேதி திருமணம் நடைபெற்றாது.

இத்திருமணம் முடிந்த பின், இருவரும் தேனிலவுக்காக இந்தோனேஷியாவிற்குச் சென்றனர்.

இந்தோனேஷியாவில் பாலி தீவில் உள்ள கடலில் இருவரும் மோட்டார் போட்டில் சென்றபோது, போட்டோஷுட் நடத்தியுள்ளனர்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்து இருவரும் படகில் இருந்து கடலில் விழுந்து நீரில் மூழ்கினர். அவர்களை மீட்கும் நடவடிகையில் அருகில் இருந்தவர்கள் முயற்சி செய்தனர். இதில், லோகேஷ்வரன் சடலம் மட்டுமே கிடைத்துள்ளது. விபூஷ்னியாவில் உடலை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

திருமணமான 10 நாளில் மருத்துவ தம்பதியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.