சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே தடம் புரண்ட பயணிகள் ரயில்.. பெரும் பரபரப்பு..!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பயணிகள் ரயிலின் இரண்டு சக்கரங்கள் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் ஒடிசா மாநிலத்தில் நடந்த மிகப்பெரிய ரயில் விபத்துக்கு பின்னர் ஆங்காங்கே சிறுசிறு ரயில் விபத்துக்கள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் சென்னை பேசின்பிரிட்ஜ் பணிமனை அருகே ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு திடீரென கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு பணிமனைக்கு சென்ற போது இந்த சம்பவம் நிகழ்த்தியுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து ரயில்வே ஊழியர்கள் இரண்டு மணி நேரம் போராடி சக்கரங்களை தடத்திற்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது...
Edited by Siva