வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 15 ஜூன் 2019 (09:45 IST)

51 பேரை கொன்று குவித்த கொடூரன்: விசாரணையில் சிரித்தான்

நியூஸிலாந்தில் கடந்த மார்ச் மாதம் இரண்டு மசூதிகளில் பயங்கரவாதி ஒருவன் புகுந்து அங்குள்ளவர்களை சரமாரியாக சுட்டதில் பலர் உயிரிழந்தனர். அதில் குற்றவாளியாக பிடிக்கப்பட்ட நபர் நேற்று விசாரணையில் சிரித்து கொண்டே பேசியது அங்குள்ளவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

நியூஸிலாந்து நகரில் உள்ள கிரிஸ்ட்சர்ச் பகுதியில் கடந்த மார்ச் மாதம் நடந்த தீவிர தாக்குதலில் 51 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயம்பட்டனர். இதுகுறித்து நியூஸிலாந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, பிரெண்டன் டாரண்ட் என்பவர்தான் இந்த தாக்குதலை நடத்தியவர் என்பது தெரிய வந்தது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரெண்டன் தாக்குதல் நடத்தியதுடன் அந்த வீடியோவை ஃபேஸ்புக்கிலும் பதிவிட்டுள்ளார். இவரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் பிரெண்டன். அங்கு இறந்தவர்களின் குடும்பத்தினரும் இருந்தனர். கொலை பற்றி கேட்டதும் பிராண்டன் சிரித்தார். இது நீதிமன்றத்தில் இருந்த அனைவருக்குமே எரிச்சலை ஏற்படுத்தியது. பிறகு சிரித்துக்கொண்டே நான் அதை செய்யவில்லை என்று கூறியுள்ளார். இதில் கடுப்பான நீதிபதி விசாரணையை அடுத்த வருடம் மே மாதம் ஒத்திவைத்தார். அதுவரை பிரேண்டன் சிறையில் இருக்கவும் உத்தரவிட்டார்.