1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 14 மார்ச் 2022 (11:44 IST)

அமெரிக்க பத்திரிக்கையாளரை சுட்டுக் கொன்ற ரஷ்ய ராணுவம்?! – உக்ரைனில் பரபரப்பு!

உக்ரைன் போர் குறித்து செய்தி சேகரிக்க சென்ற அமெரிக்க பத்திரிக்கையாளர் ரஷ்ய ராணுவத்தால் கொல்லப்பட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இதனால் உக்ரைன் மக்கள் பலரே அகதிகளாக அண்டை நாடுகளில் அடைக்கலம் தேடும் அவலம் எழுந்துள்ளது. உக்ரைனில் உள்ள பிற நாட்டவர்களும் அண்டை நாடுகள் வழியாக சொந்த நாடு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் உக்ரைன் போர் குறித்து செய்தி சேகரிக்க சென்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை நிருபர் பெண்ட் ரெனாட், ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாக உக்ரைன் உறுதிப்படுத்தியுள்ளது. ரெனாடுடன் உள்ளூர் பத்திரிக்கையாளர்கள் சிலரும் காரில் இருந்ததாகவும் அந்த கார் மீது ரஷ்ய படைகள் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.