அமெரிக்காவில் ஒரு விநாயகர் கோவில் தெரு! – வைரலாகும் புகைப்படம்!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு தெருவிற்கு விநாயகர் தெரு என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நியூயார்க் மாகாணத்தின் குயின்ஸ் கவுண்டிக்கு உட்பட்ட போவின் தெருவில் விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. 1977ல் அமைக்கப்பட்ட இந்த கோவில் நியூயார்க் மாகாணத்திலேயே முதல் இந்து கோவிலும் மிகவும் பழமையான கோவிலும் ஆகும்.
இந்த கோவில் உள்ள போவின் தெரு அடிமைத்தன எதிர்ப்பு மற்றும் மத சுதந்திரத்திற்காக போராடிய ஜான் போவின் நினைவாக அவரது பெயர் வைக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த தெருவில் விநாயகர் கோவில் பிரசித்தி பெற்று இருப்பதால் இந்த தெருவின் பெயர் “கணேஷ் டெம்பிள் ஸ்ட்ரீட்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நமது ஊர்களில் விநாயகரின் வெவ்வேறு பெயர்களில் ஏராளமான தெருக்கள் உள்ள நிலையில் அமெரிக்காவிலும் விநாயகர் தெரு ஒன்று உள்ளது தற்போது வைரலாகி வருகிறது.