திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 29 மார்ச் 2022 (14:59 IST)

சாலையை மறைத்த பனி.. மோதி குவிந்த வாகனங்கள்! – பரபரப்பை கிளப்பும் வீடியோ!

அமெரிக்காவில் கடும் பனிமூட்டத்தால் சாலையில் வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்றாக மோதி விபத்தான வீடியோ வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கடுமையான பனிபொழிவு இருந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட பனிப்புயலால் அமெரிக்காவின் பாஸ்டன் உள்ளிட்ட பகுதிகள் கடும் சேதத்தை சந்தித்தன.

இந்நிலையில் தற்போது பென்சில்வேனியாவில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. நேற்று பென்சில்வேனியா நெடுஞ்சாலை ஒன்றில் பனிபொழிவு அதிகமாக இருந்த நிலையில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. வாகனங்கள் விபத்தாகி சாலையில் கிடப்பது தெரியாமல் அடுத்தடுத்து வந்த வாகனங்களும் தொடர்ந்து மோதி விபத்திற்கு உள்ளானது.

சுமார் 60க்கும் மேற்பட்ட வாகனங்கள் சில நூறு மீட்டர் தூரங்கள் வரை மோதி விபத்திற்குள்ளான நிலையில் 3 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.