செவ்வாய், 5 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 27 மார்ச் 2022 (11:08 IST)

ஆர்.ஆர்.ஆர் பாதி படத்தை ஓட்டிய திரையரங்கம்! – கடுப்பான ரசிகர்கள்!

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படத்தின் முதல் பாதியை மட்டும் அமெரிக்க திரையரங்கம் ஒன்று திரையிட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஆர்.ஆர்.ஆர். சுதந்திர வரலாற்று காலத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் வெளியாகியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகியுள்ள இந்த படம் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. அமெரிக்காவின் கலிஃபொர்னியாவில் உள்ள திரையரங்கம் ஒன்றில் ஆர்.ஆர்.ஆர் திரையிடப்பட்டுள்ளது. படம் தொடங்கி முதல் பாதி முடிந்த நிலையில் மீத படம் திரையிடப்படவில்லை. அப்போதுதான் படம் 3 மணி நேரம் என்பதும் தாங்கள் திரைப்படத்தின் பாதியை மட்டுமே பதிவேற்றியதும் திரையரங்க நிர்வாகத்திற்கு தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து திரையரங்க நிர்வாகம் படம் பார்க்க வந்தவர்களிடம் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.