வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 31 டிசம்பர் 2023 (14:51 IST)

முதல்வருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க அமைச்சர்கள், எம்பிக்கள் வரவேண்டாம்: திமுக அறிவிப்பு

anna arivalayam
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டுக்கு  திமுக தலைவருக்கு வாழ்த்து தெரிவிக்க கட்சியின் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் வருகை தருவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அன்றைய தினம். அண்ணா அறிவாலயம் களை கட்டும்.

இந்த நிலையில் திமுக தரப்பில் இருந்து சற்றுமுன் அறிக்கை வெளியாகி உள்ளது.  அந்த அறிக்கையின் ’வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை நேரில் சந்திக்க வருவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அமைச்சர்கள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், திமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சி தோழர்கள் முதல்வருக்கு புத்தாண்டு வாழ்த்து நேரில் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

Edited by Siva