திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 3 ஜூலை 2020 (17:37 IST)

சொகுசு விமான பயணத்தை அனுபவிக்க புதிய திட்டம் !

இந்த உலகில் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பது அனைத்து மக்களின் கனவாக இருக்கும். அப்படி மக்களின் விருப்பத்தைத் தெருந்து கொண்டு அதை நிறைவேற்ற முன் வந்துள்ளது  தைவான் நாட்டு அரசு.

தைவான் நாட்டில் உள்ள சாங்ஷன் விமான நிலையத்தில் மக்களுக்கு விமான அனுபவத்தை ஏற்பட்டுத்த வேண்டும் என்பதற்காக போலி விமான அனுபவத்தை ஏற்படுத்த முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.

இதில் முதற்கட்டமாக சுமார் 60 பேருக்கு விமான நிலையம் இந்த அனுபவத்தை பெற வைத்துள்ளது.  அதாவது உலகம் முழுவதும் கொரொனா காலகட்டத்தில் விமானப் பயணம் இல்லாத சூழலில் விமானம் பயணம் செய்ய ஏங்குவபவர்களுக்கு இந்த அனுபவத்தைக் கொடுத்துள்ளது தைவான் விமான நிலையம்.

மேலும் இந்த விமான அனுபவத்தை அவர்கள் பெறும்போது, கொரோனா விழுப்புணர்வு செய்யப்பட்டது  குறிப்பிடத்தக்கது.