வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 14 ஜூலை 2020 (18:59 IST)

ராமர் ஒரு நேபாளி: நேபாள பிரதமரின் கருத்துக்கு நேபாள வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

ராமர் இந்திய கடவுள் இல்லை என்றும் அவர் நேபாள கடவுள் என்றும் நேபாளத்தில் தான் உண்மையான அயோத்தி இருப்பதாகவும் இந்தியாவில் உள்ளது உண்மையான அயோத்தி இல்லை என்றும் நேபாள பிரதமர் ஷர்மா ஒலி அவர்கள் நேற்று இரவு கூறியதாக நேபாள ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன
 
இந்த செய்திகள் இந்தியாவின் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதுகுறித்து இந்து மத குருமார்கள் நேபாள பிரதமருக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு நேபாள மக்கள் அவருக்கு எதிராக போராட வேண்டும் என்றும் கூறினார். அதுமட்டுமின்றி ஒரு சில கட்சியினர் இதுகுறித்து மீம்ஸ்களை வெளியிட்டு கிண்டல் செய்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நேபாள வெளியுறவு அமைச்சகம் இது குறித்து விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது: அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ராமர் ஒரு நேபாளி என்ற பிரதமர் ஒளியின் கருத்தில் உள்நோக்கம் இல்லை. நேபாள பிரதமர் ஒளியின் கருத்து யாருடைய மனதையும் புண்படுத்தும் உள்நோக்கம் கொண்டது இல்லை. அயோத்தியின் முக்கியத்துவத்தையும் கலாசார மதிப்பையும் சீர்குலைக்கும் அர்த்தம் இல்லை என கூறப்பட்டுள்ளது. இந்த விளக்கத்தை அடுத்து ராமர் பிரச்சனை முடிவுக்கு வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்