வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (14:58 IST)

அணு ஆயுதங்கள் பத்தாது.. இன்னும் அதிகம் வேணும்!? - வடகொரிய அதிபர் உத்தரவு!

வடகொரியா அணு ஆயுத சோதனைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க அதிபர் கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

வடகொரியா கடந்த பல ஆண்டுகளாக உலகளாவிய நாடுகளுடனான சமாதான போக்கை கடைப்பிடிக்காமல் தன் விருப்பப்படியே செயல்பட்டு வருகிறது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகள் விதித்தப்போதும் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதம் உள்ளிட்ட பல ஆயுத சோதனைகளை செய்து அண்டை நாடுகளான தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்டவற்றை அச்சுறுத்தி வருகிறது.

 

சமீபத்தில் தென்கொரியாவிற்கு குப்பைகள் நிரம்பிய பறக்கும் பலூன்களை விட்டு வித்தியாசமான தொந்தரவுகளையும் வடகொரியா செய்து வந்தது. இந்நிலையில் வடகொரியா உருவாகி 76 ஆண்டுகள் நிறைவுற்றதை ஒட்டி தலைநகர் பியாங்யாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிம் ஜாங் அன் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

 

அதில் அவர் அணு ஆயுதங்களின் உற்பத்தையை அதிகரிப்பதற்காக நாடு முழுவதும் அணுசக்தி கட்டுமானக் கொள்கை செயல்படுத்தப்பட உள்ளதாகவும், அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும், தேவைப்பட்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்தவும் வடகொரியா தயாராக இருப்பதாக அவர் பேசியுள்ளார். இது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

Edit by Prasanth.K