1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 29 டிசம்பர் 2022 (13:04 IST)

வரலாறு காணாத பனி; உறைந்தது நயகரா நீர்வீழ்ச்சி! – அமெரிக்க மக்கள் அவதி!

niagara falls
அமெரிக்காவில் கடும் பனிப்புயல் வீசிவரும் நிலையில் பிரம்மாண்டமான நயகரா நீர்வீழ்ச்சி உறைந்து போயுள்ளது.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களில் மூழ்கியுள்ள நிலையில் அமெரிக்கா பனியில் சிக்கி தவித்து வருகிறது. வரலாறு காணாத கடும் பனிபொழிவால் அமெரிக்க மாகாணங்கள் பல பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளை விட்டே வெளியேற முடியாத சூழல் நிலவுவதால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களையிழந்துள்ளன.

பல மாகாணங்களில் விமான சேவைகள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சாலைகள் பனிமூடி கிடப்பதால் வாகனங்கள் மூலமாகவும் பயணிக்க முடியாமல் மக்கள் சிக்கியுள்ளனர். சில பகுதிகளில் கடும் பனியால் மக்கள் சிலர் கார்களுக்குள் உறைந்த நிலையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதீத பனிப்பொழிவாம் அமெரிக்காவின் பிரபலமான நயகரா நீர்வீழ்ச்சியே உறைந்து போய் காணப்படுகிறது. வரும் நாட்களில் தொடர்ந்து பனிப்பொழிவு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவே புத்தாண்டு கொண்ட்டாட்டங்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

Edit By Prasanth.K