1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 29 நவம்பர் 2022 (16:57 IST)

சேட்டிலைட் போனை பயன்படுத்திய ரஷிய முன்னாள் அமைச்சர் கைது

RUSSIAN EX MP
விமான நிலையத்தில் சேட்டிலைட் செல்போன் பயன்படுத்திய ரஸ்ய  நாட்டைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில்  புஷ்கர் சிங் தாமி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள டேராடூன்  விமான  நிலையத்தில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்  விக்டர் சேமனோவ்(64) இன்று சேட்டிலைட் போனை பயன்படுத்தி, புகைப்படங்கள் எடுத்தார்.

அப்போது, சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் இதைப் பார்த்து அவரிடம் சேட்டிலைட் போன் பயன்படுத்தியது குறித்து விசாரித்தனர்.

அவர், சேட்டிலைட் போனை இங்குப் பயன்படுத்தக் கூடாது என்பது தனக்குத் தெரியாது என்று கூறினார்.

இதையடுத்து,  அவர் டேராடூன் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரிடமிருந்த சேட்டிலைப் போன் பறிமுதல் செய்யப்பட்டு,  அவருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj