வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 25 ஏப்ரல் 2020 (18:19 IST)

செயற்கை சுவாசத்துக்கு வெண்டிலேட்டரை கண்டுபிடித்த நாசா விஞ்ஞானிகள் !

உலகம் முழுவதும் கொரொனா வைரஸால், சுமார் 22 லட்சத்து 82 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,98,114 பேர் குணமடைந்துள்ளனர்197 667 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில்,  இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,942 ஆக உயர்ந்துள்ளது.  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 779 ஆகவும், குணமடைந்தவர்கள்  எண்ணிக்கையும்  5,210, ஆகவும், சிகிச்சை பெற்றுவருபவர்கள் 18,953 ஆகவும் உள்ளது.

உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இதைத் தடுக்க பல்வேறு நாடுகள், மற்றும் உலக சுகாதார அமைப்பு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இந்நிலையில், கொரோனா நோயாளிக்குச் செயற்கை சுசாசத்துக்கான வெண்டிலேட்டரை நாசா அறிவியலாளர்கள் தயாரித்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது.