1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 10 மே 2022 (13:20 IST)

நமல் ராஜபக்சேவின் மனைவி தப்பியோடும் வீடியோ வெளியீடு!

namal rajapakse
நமல் ராஜபக்சேவின் மனைவி தப்பியோடும் வீடியோ வெளியீடு!
 இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு மக்கள் கொந்தளித்து வீதியில் இறங்கி பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு எதிராக போராடி வருகின்றனர் 
 
இந்த நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவியிலிருந்து விலகிய நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓட முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே வெளிநாட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது நாமல் ராஜபக்சவின் மனைவி தப்பியோடும் காட்சியின் வீடியோ வைரலாகி வருகிறது 
 
இலங்கையில் உள்ள படை முகாமில் ராஜபக்ச குடும்பம் இருப்பதாக கூறப்படும் நிலையில் அந்த வீட்டில் இருந்து ஹெலிகாப்டரில் ராஜபக்சே குடும்பத்தினர் ஹெலிகாப்டரில் ஏறும் காட்சியும் குறிப்பாக அதில் நமல் ராஜபக்சே மனைவி ஏறும் காட்சியும் வீடியோவில் வைரலாகி வருகிறது