1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 10 மே 2022 (10:28 IST)

இலங்கை நாடாளுமன்றத்தை உடனே கூட்ட உத்தரவா? பெரும் பரபரப்பு!

srilanka
இலங்கை நாடாளுமன்றத்தை உடனே கூட்ட உத்தரவிடுமாறு அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு சபாநாயகர் கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இலங்கையில் கடந்த சில நாட்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்
 
நேற்று இலங்கை ஆளும் கட்சியின் எம்பி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார் என்பதும் மஹிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் கட்டுக்கடங்காத அளவில் வன்முறை அதிகரித்து வருவதன் காரணமாக இலங்கை நாடாளுமன்றத்தை உடனே கூட்ட உத்தரவிடுமாறு அதிபர் ராஜபக்சேவுக்கு சபாநாயகர் கடிதம் எழுதியுள்ளார் 
 
மேலும் நாடு முழுவதும் இருந்து பொதுமக்கள் கொழும்பு வருவதை தடுப்பதற்காக ரயில் போக்குவரத்தை நிறுத்தி அரசு உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது